ஜூலை 4ஆம் தேதி சென்னையில் 500 புதிய பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கும்பகோணத்தில் இருந்து காரைக்கால், குமுளி வரை செல்லக்கூடிய ஆறு புதிய பேருந்துகளை வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
செய்தியாளர்களிடம் உளறிய அமைச்சர் -பரபரப்பு - உளறல்
தஞ்சாவூர்: நெல் குவிண்டாலுக்கான விலையை தெரிவிக்கும்போது கரும்பிற்கான விலையை சொன்னேன் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு உளறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய துரைக்கண்ணு, ”விவசாயிகள் நலன் கருதி தொடர்ந்து நெல்லுக்கு ஆதாய விலை குவிண்டாலுக்கு ரூபாய் 2,750 வழங்கி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் குவிண்டாலுக்கு அதிக விலை அளிக்க முதலமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் வழியாக போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, நெல் குவிண்டாலுக்கான விலையை செய்தியாளர்கள் கேட்டபோது, கரும்பிற்கான விலையை சொன்னேன் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.