தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேராவூரணி தொகுதி எம்எல்ஏ-வுக்கு கரோனா! - அதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா

தஞ்சாவூர்: பேராவூரணி தொகுதி எம்எல்ஏ-வுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

peravurani constituency MLA affected COVID-19
பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராஜூக்கு கரோனா தொற்று

By

Published : Jul 23, 2020, 10:09 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்து வருபவர் கோவிந்தராஜ். அதிமுக எம்எல்ஏ-வான இவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா முகாமில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தராஜூக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள அவரது வீடு மற்றும் தெருக்களில், பேரூராட்சி பணியாளர்கள் சென்று கிருமி நாசினி தெளித்தும், தடுப்புகள் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ.,வுக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details