தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருந்து கட்டடக் கலையையும் பார்த்து வியந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு வில்வ இலை, விபூதி, திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு பொடி,பழங்கள், தேன், கரும்புச்சாறு, பால், தயிர், மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.