தஞ்சாவூர்: இசைக் கருவிகளில் ஒன்றான வயலின் இசையை தஞ்சையைச் சேர்ந்த மூத்த வயலின் இசைக்கலைஞர் நடராஜன் (75) என்பவர் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் இலவசமாக கற்றுத் தருகிறார். பாரம்பரியமாக உள்ள இந்த வயலின் இசையை வாசிப்பவர்கள் தஞ்சையில் அரிதாகிவிட்ட காலத்தில் இக்கலையை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு இசைப்பயிற்சி கற்றுத் தருகிறார்.
இவர் பிரபல இசைக்கலைஞர் டிஆர் பாப்பாவின் உறவினர் ஆவார். மாணவர்களும் விடுமுறை நாட்களில் ஆர்வமுடன் வந்திருந்து வயலின் இசையைக் கற்று வருகின்றனர். இதுகுறித்து வயலின் இசைக்கலைஞர் நடராஜன் கூறும்போது, 'தஞ்சாவூரில் வயலின் இசைக்கலைஞர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் வயலின் வாசித்த நிலையில் தற்போது ஒரு சிலரே உள்ளனர்.