தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை - உணவகத்தை மூடிய அலுவலர்கள் - Tanjavur shawarma news

ஷவர்மா சாப்பிட்டு உடல் உபாதை ஏற்பட்ட மூன்று கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் சம்பந்தப்பட்ட ஷவர்மா கடை மூடப்பட்டது.

ஷவர்மா கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள்
ஷவர்மா கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள்

By

Published : May 6, 2022, 7:32 PM IST

Updated : May 6, 2022, 8:27 PM IST

தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரவீன் (22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தர்மபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர்.

இவர்கள், நேற்றிரவு (மே 05) ஒரத்தநாடு பிரிவு சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே உள்ள கிரீன்லீஃப் பாஸ்ட் புட் ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பினர். அங்கு சக மாணவர்களுடன் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு வந்தோம் என பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பிரவீன் உள்ளிட்ட 3 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

இதனால் சக மாணவர்கள் செய்வதறியாது தவித்தனர். உடன் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இரவு முழுவதும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல் ஒவ்வாமை பாதிப்பு அதிகமானதால் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மாணவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஷவர்மா கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள்

இந்நிலையில் சம்பந்தப்பட்ட கடைகளை உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட உணவுப் பொருள் அலுவலர் சித்ரா கடைக்கு வந்து ஆய்வு செய்தார். ஆய்வில் கடைக்கு உரிய அனுமதி இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

இதையும் படிங்க:நெல்லையில் கொடூரம்... பாட்டியை தீ வைத்து எரித்து கொன்ற இரு பேத்திகள் கைது

Last Updated : May 6, 2022, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details