கும்பகோணத்தில் தினமும் சாராயமும் மது பாட்டில்களும் புதுசேரியிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து சோதனை நடத்தியபோது 60 லிட்டர் எரிசாராயமும், 240 மதுபாட்டில்களும் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தல்: மூவர் கைது - 3 Man arrested
தஞ்சாவூர்: புதுச்சேரியிலிருந்து கும்பகோணத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து நடைபெற்ற சோதனையில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்ட சுகுமார் (40) ,வேல்முருகன் (35), தமிழ்ச்செல்வன் (45), ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறையில் இருக்கும் அம்பு ரோஸ் என்பவர் ஏற்பாட்டில் இதனைச் செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதனால் அம்புரோஸ் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.