தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் நிதி நிறுவனம் மீது தாக்குதல் - மார்க்கெட்டிங் அண்ட் பைனான்ஸ் லிமிடெட்

பட்டுக்கோட்டை: தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அடையாளம் தெரியாத இரண்டு பேர் அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்து விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிதி நிறுவனத்தில் புகுந்த 2 பேர் பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு ஓட்டம்
தனியார் நிதி நிறுவனத்தில் புகுந்த 2 பேர் பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு ஓட்டம்

By

Published : Sep 8, 2020, 2:37 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள கோட்டை குளம் பகுதியில் மார்க்கெட்டிங் அண்ட் பைனான்ஸ் லிமிடெட் என்னும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு இரண்டு சக்கர வாகனங்களுக்கு மாதத் தவணை மூலம் நிதி அளித்து வருகின்றனர். இந்தத் தனியார் நிறுவனம் தஞ்சையிலும் உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலையில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் அங்கு சென்று பணிபுரிந்த ஊழியர்களை மிரட்டி வெளியேற்றிவிட்டு அங்கிருந்த கண்ணாடி, கம்ப்யூட்டர், ஃபேன் போன்ற மின்சாதன பொருள்களை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பட்டுக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் தனியார் நிறுவனத்தில் உடைந்து கிடந்த பொருள்களை பார்வையிட்டு உடைத்து விட்டு தப்பி ஓடிய அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details