கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாள்தோறும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேவருகிறது. இருந்தும் பலர் அதிலிருந்து குணமாகி வீடு திரும்பிவருகின்றனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 55 பேர் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அவர்களில் 8 பேர் சில நாள்களுக்கு முன்பு குணமடைந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று கும்பகோணம், அதிராம்பட்டினம், நெய்வாசல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறு பெண்கள் உள்பட 10 பேர் கரோனா வைரசிலிருந்து குணமடைந்தனர்.