தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தையுடன் ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

தென்காசியில் கணவர் இரண்டாவது திருமணம் செய்த நிலையில் அவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தையுடன் ஆட்சியர் வளாகத்தில் தீ குளிக்க முயன்ற பெண்
குழந்தையுடன் ஆட்சியர் வளாகத்தில் தீ குளிக்க முயன்ற பெண்

By

Published : Oct 31, 2022, 10:32 PM IST

தென்காசி: புளியங்குடி பகுதியைச்சேர்ந்தவர், சாகுல் ஹமீது. இவரது மனைவி துரை மீரா. இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சாகுல் ஹமீது 2ஆவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரிடம் சேர்த்து வைக்கக்கோரி கூறி ஆட்சியர் வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து துரை மீரா கூறுகையில், 'தனக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகின்றன. கணவர் வெளிநாடு சென்று வேலை செய்துவந்தார். தற்போது மூன்று வருடங்களாக தென்காசியில் பணிபுரிகிறார். இந்நிலையில் நகை பணங்கள் என வரதட்சணை கொடுத்த நிலையிலும், மேலும் வரதட்சணை கேட்டு மாமியாரோடு சேர்த்து கணவர் தன்னைக்கொடுமை செய்து வருகிறார்.

இது குறித்து புளியங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் குழந்தை பிறந்த நிலையில் அழகாக இல்லை என்று கூறி, வேறு பெண்ணைத்திருமணம் செய்துகொண்டுள்ளார். எனவே, தனது பிள்ளையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் காவல்துறையினர் அலட்சியம் காரணமாக பெண் மண்ணெண்ணெய் கேனுடன் வளாகத்திலேயே தீக்குளிக்க முயன்ற சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி தலையில் தண்ணீர் ஊற்றி விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தையுடன் ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

இதையும் படிங்க:கடலூரில் இளைஞரை அடித்து செல்போனைப்பறித்த சில திருநங்கைகள்

ABOUT THE AUTHOR

...view details