தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டுப் பூனைக்கு வைத்த கூண்டில் சிக்கிய மரநாய்! - Tenkasi District News

தென்காசி: பாவூர்சத்திரத்தில் கூண்டில் சிக்கிய மரநாயை தீயைணைப்பு துறை வீரர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மரநாய்
மரநாய்

By

Published : Dec 1, 2020, 10:30 PM IST

Updated : Dec 1, 2020, 10:35 PM IST

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மெயின் ரோட்டில் அவ்வையார் மகளிர் பள்ளி அருகே பிராய்லர் கடை வைத்து நடத்துபவர் கந்தசாமி. இவர் கடையில் விற்பனைக்காக வைத்திருக்கும் கோழிகளை வெருகு என அழைக்கப்படும் காட்டுப் பூனைகள் அடிக்கடி பிடித்து சென்றுவிடும்.

பூனையை பிடிப்பதற்காக இவர் கடையின் பின்புறம் இரும்பு வலை கூண்டு ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் இன்று கடையை திறந்து பின் பக்கம் சென்று பார்த்தபோது கூண்டுக்குள் மரநாய் வந்து சிக்கியது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் தென்காசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அத்தகவலின் அடிப்படையில், தென்காசி தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி ரமேஷ் தலைமையில் வீரர்கள் மரநாயை மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:சாலையில் கரைபுரண்டோடிய மதுபானம்!

Last Updated : Dec 1, 2020, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details