தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2020, 2:18 PM IST

ETV Bharat / state

அடிப்படை வசதியின்றி அவதிப்படும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்!

தென்காசி: சிவகிரி பகுதியிலுள்ள கரோனா தனிமைபடுத்தப்படுள்ள முகாமில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாகத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதிகள் இல்லாமல்அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி அவதி
அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிகளவில் சொந்த ஊருக்குத் திரும்பிவருகின்றனர். அதனால் தென்காசி மாவட்ட எல்லைகளான ஆலங்குளம், புளியரை, சிவகிரி ஆகிய சோதனைச்சாவடிகளில் கடுமையான சோதனைக்கு பின்னரே வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அப்படி வருபவர்கள் தனியார் கல்லூரிகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனைக்குள்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் சிவகிரி பகுதியிலுள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் கல்லூரி மாணவிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

இது குறித்து அவர்கள், "வெளிமாவட்டங்களிலிருந்து வந்து நான்கு நாள்களுக்கு மேலாகியும் பரிசோதனை முடிவு வராமலும், முகாமில் உணவு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படாததாலும் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:வெளியூர்களிலிருந்து 14,600 பேர் நெல்லைக்கு வருகை

ABOUT THE AUTHOR

...view details