தென்காசியில் நடிகர் அஜித்குமார் பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளதாக வைரலாகி வரும் வீடியோ தென்காசி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், பைக் ரேஸ் மீது அதீத காதல் கொண்டவர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் அவரது பிஎம்டபிள்யூ பைக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னையில் இருந்து விழுப்புரம், ஆத்தூர், சேலம், தருமபுரி வழியாக பெங்களூரு சென்றார். அப்போது அவரின் பைக் பயணம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது பைக்கில் இந்தியா முழுவதும் அஜித்குமார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிலும் வலிமை திரைப்படத்துக்கு பிறகு அஜித்குமாரை அவரது பயண புகைப்படங்களிலேயே அதிகளவில் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் தென்காசியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் வழியில் உள்ள இடைகால் பகுதியான திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், அஜித்தின் பைக் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் இந்த வீடியோவில் வரும் நபர் அஜித்குமார் இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அஜித்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு’ திரைப்படம், வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் படத்தை புரோமோஷன் செய்ய இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டனரா என்று தெரியவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:நடிகர் அஜித்குமார் பெயரில் பண மோசடி - நெல்லையில் பரபரப்பு