தென்காசி மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக கடந்த ஐந்து நாள்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (டிச.08) தென்காசி மாவட்டம் செங்கோட்டை, குற்றாலம், சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
தென்காசியில் பெய்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு! - கனமழை
தென்காசி: புரெவி புயல் காரணமாக மாவட்டத்தில் பெய்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசியில் பெய்த கனமழை
கனமழையின் காரணமாக சாலைகளின் இருபுறமும் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தென்காசி நகர் பகுதியில் அதிகப்படியாக 21மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், மாவட்டத்திலுள்ள அடவி நயினார் அணை, கருப்பா நதி, கடனா நதி உள்ளிட்ட பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: துாத்துக்குடியில் கனமழை: மக்களின் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்!