தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி சிறுவனுக்கு போதை பொருளை கட்டாயப்படுத்தி கொடுத்த இளைஞர்கள்; வைரல் வீடியோ - latest tamil news

தென்காசியில் பள்ளி சிறுவனை போதை பொருளை பயன்படுத்துமாறு, சில இளைஞர்கள் கட்டாயப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் சிறுவனின் வீடியோ
வைரலாகும் சிறுவனின் வீடியோ

By

Published : Dec 15, 2022, 6:22 PM IST

வைரலாகும் சிறுவனின் வீடியோ

தென்காசி: வீரகேரளம்புதூர் பகுதியில் இயங்கி வரும் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று, பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் கிராமத்தில் நின்று கொண்டிருந்துள்ளது. அப்பொழுது நாகல்குளம் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பள்ளிச் சிறுவன் ஒருவனை வேனுக்குள் அழைத்து அவனை ’ஹான்ஸ்’ எனும் போதை பொருளை பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்திகா கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுவனுக்கு இளைஞர்கள் போதை பொருளை கட்டாயப்படுத்தி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. போதை பொருளை சிறுவன் தனது வாயில் வைத்து விட்டு வலியால் துடித்து பின்பு அதனை தூக்கி எறிந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவின் அடிப்படையில் பாவூர்சத்திரம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் நாகல்குளத்தைச் சேர்ந்த மூவர் ஈடுபட்டதும், அவர்கள் மூன்று பேரும் 17 வயது மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது. பின் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நாகை பாஜக நிர்வாகியின் கல்லூரியில் பாலியல் தொல்லை; வெளியான பகீர் ஆடியோ... நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details