தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம உதவியாளர் டிரான்ஸ்பர்.. போஸ்டர் ஒட்டி கொண்டாடிய மக்கள்! - tenkasi news in tamil

தென்காசி மாவட்டம் கடையத்தில் கிராம உதவியாளரை பணியிட மாற்றம் செய்ததற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம உதவியாளர் பணியிட மாற்றம்: நன்றி கூறி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
கிராம உதவியாளர் பணியிட மாற்றம்: நன்றி கூறி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

By

Published : Nov 20, 2022, 6:16 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் தெற்கு கடையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் அப்பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.

பணி காலத்தில் அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தங்கமணி கடையம் அருகேயுள்ள அடைச்சாணி என்ற பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து தெற்கு கடையம் ஊர் பொதுமக்கள் சார்பாக கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "நன்றி, நன்றி, நன்றி, தெற்குகடையம் கிராம மக்களுக்கு தூய்மையான, நேர்மையான நிர்வாகம் கிடைத்திட தெற்குகடையம் கிராம உதவியாளர் *வசூல்ராஜா* தங்கமணியை பணியிட மாற்றம் செய்த அரசு அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் வருவாய் துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கோஷ்டிப்பூசல்?

ABOUT THE AUTHOR

...view details