தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது! - Vigilance raid in tenkasi

தென்காசி: கொடிக்குறிச்சியில் விஏஓ பட்டா பெயர் மாற்றம் செய்ய 4000 ரூபாய் லஞ்சம் பெற்ற அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது
லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது

By

Published : Nov 30, 2020, 8:23 PM IST

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தனது நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து தர கடந்து மாதம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் (45) காலம் தாழ்த்தி வந்த நிலையில், அதற்கான காரணத்தை சங்கர் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் முறையான ஆவணங்கள் வைக்கவில்லை எனவும், அதனை சரிசெய்ய 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத சங்கர், திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் அறிவுறுத்தலின்படி, லஞ்ச பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் சங்கர் கொடுத்தார். அப்போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் அனிதா தலைமையிலான அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details