தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க வாசுதேவநல்லூர் எம்எல்ஏ வலியுறுத்தல்! - வாசூதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன் செய்தி

தரணி சர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் மனோகரன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

Vasudevanallur MLA
கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க வாசுதேவநல்லூர் எம்எல்ஏ வலியுறுத்தல்

By

Published : Sep 22, 2020, 4:53 PM IST

தென்காசி:தரணி சர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் மனோகரன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த மனோகரன், தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தனது சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சிவகிரி பகுதிகளில் பெரும்பாலானோர் விவசாய தொழில் ஈடுபட்ட வருகின்றனர்.

தற்போது விவசாயிகள் கரும்புகளை பயிரிட்டுள்ளனர். பயிரிடப்பட்ட கரும்புகளை வாசுதேவநல்லூரிலுள்ள தரணி சர்க்கரை ஆலைக்கு வழங்கி வருகின்றனர். அந்த ஆலை நிர்வாகம், கடந்த 2018-19ஆம் ஆண்டில் வழங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகையை தற்போது வரை வழங்காமல் உள்ளது. எனவே அத்தொகையை வழங்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வாகன விபத்தில் சிக்கிய கடத்தல் ரேஷன் அரிசி

ABOUT THE AUTHOR

...view details