தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேன் டயர் வெடித்து விபத்து: திருமணத்திற்கு சென்ற 30க்கும் மேற்பட்டோர் காயம் - குற்றச் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே திருமணத்திற்காக சென்ற வேனின் டயர் வெடித்ததில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருமணத்திற்கு வந்த வேன் டயர் வெடித்து விபத்து: 30க்கும் மேற்பட்டோர் திருமணத்திற்கு வந்த வேன் டயர் வெடித்து விபத்து: 30க்கும் மேற்பட்டோர் காயம்காயம்
திருமணத்திற்கு வந்த வேன் டயர் வெடித்து விபத்து: 30க்கும் மேற்பட்டோர் காயம்

By

Published : Sep 9, 2022, 5:59 PM IST

தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள சோளச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகனுக்கும் கல்கண்டு சேவலைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சங்கரன்கோவில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (செப்.9) திருமணம் நடந்தது. இதற்காக அவரது உறவினர்கள் சோலைச் சேரியிலிருந்து சங்கரன்கோவிலுக்கு வேனில் சென்றுகொண்டிருந்தனர்.

வேன் பருவக்குடி விலக்கு அருகே ென்றபோது வேனின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் வேன் தல குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த ஐந்து பேர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காயமடைந்தவர்களை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சங்கரன்கோவில் சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ராஜபாளையம், சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன் ஆகியோர் நேரில் வந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்களிடம் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க:திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில் பைக் விபத்தில் மணமகன் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details