தென்காசி:தென்காசி மாவட்டம், புளியங்குடி காந்தி பஜாரில் ஜவுளிக்கடை ஒன்று உள்ளது. இங்கு கடந்த 16ஆம் தேதி ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Video: துணிக்கடையில் நைசாக ஃபோனை அபேஸ் செய்த பாட்டிகள்: இது புளியங்குடி சம்பவம்! - தென்காசி புளியங்குடியில் செல்போன் திருட்டு சம்பவம்
தென்காசி ஜவுளிக்கடையில் இரண்டு மூதாட்டிகள் செல்போன் திருட்டில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அப்போது ஜவுளி வாங்க வந்த இரண்டு மூதாட்டிகள் ஜவுளி எடுத்துவிட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு சென்றனர். அப்போது, காசாளருக்கு செல்போன் அழைப்பு வந்ததைத்தொடர்ந்து அதில் பேசிவிட்டு, செல்போனை தன் மேஜையில் வைத்துள்ளார். மூதாட்டிகள் ஜவுளிக்குப் பணம் செலுத்திவிட்டு, காசாளர் கவனம் திசை திரும்பிய நிலையில், அவரின் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை திருடிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இந்தக் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மூதாட்டிகள் செல்போன் திருட்டில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியருக்கு டார்ச்சர்!- மூன்று மாணவர்கள் இடைநீக்கம்