தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மரியாதை! - Tribute paid to freedom fighter Ondiveeran in Tenkasi

தென்காசி : விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு தென்காசி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்காசியில் விடுதலை வீரர் ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தப்பட்டது!
தென்காசியில் விடுதலை வீரர் ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தப்பட்டது!

By

Published : Aug 20, 2020, 4:27 PM IST

ஏகாதிபத்திய பிரிட்டனின் கம்பெனி அரசுக்கு எதிராக போராடிய தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 20ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக தடை உத்தரவு உள்ளதால் சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் பெருமளவில் வருகையை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் மங்கம்மா சாலையில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் திமுகவினர், ஆதித்தமிழர் பேரவையினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details