தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பறக்கும் படையா.. பதற வைக்கும் படையா! - சிக்கிய ரூ. 4,57,500

தென்காசி: தமிழ்நாடு- கேரள எல்லைப்பகுதியில் வாத்து வியாபாரிடமிருந்து ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 4 லட்சத்து, 57 ஆயிரத்து, 500 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பறக்கும படையிடம் சிக்கிய 4,57,500
தேர்தல் பறக்கும படையிடம் சிக்கிய 4,57,500

By

Published : Mar 10, 2021, 2:14 PM IST

தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு-கேரள எல்லைப்பகுதியான புளியரை சோதனைச் சாவடி வழியாக தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த பலர் வணிக நோக்கத்திற்காக வந்து செல்லுவது வழக்கம். தற்போது மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படையினர் இப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கோட்டை வட்டாட்சியர்
இந்நிலையில் கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவர் சிக்கந்தர் பீவி தலைமையிலான பறக்கும் படை குழுவினர், தமிழ்நாடு- கேரள எல்லையான கோட்டைவாசலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதி வழியாக வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பயணித்த ஜோஸ்வா, ஜெய்மான் ஆகியோரிடமிருந்து உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டதாகக் கூறி ரூ.4 லட்சத்து, 57 ஆயிரத்து, 500 ரூபாயை பறிமுதல்செய்தனர்.
இந்தப் பணம் செங்கோட்டை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
செங்கோட்டை வட்டாட்சியரிடம் பணம் ஒப்படைப்பு

மேலும், அவர்கள் வாத்து வியாபாரி எனவும் அந்தப் பணம் வாத்து வாங்க கொண்டுவந்த பணம் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தென்காசியில் பறக்கும் படை அதிரடி: ரூ.3.95 லட்சம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details