தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தடுப்புச் சுவரைத் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது.
அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்ப கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த இரு நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது.