தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அணைக்கரை முத்துவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் ! - முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்

தென்காசி: வனத்துறையினரின் துன்புறுத்தலால் உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்துவின் குடும்பத்தினரை முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உயிரிழந்த தென்காசி விவசாயி முத்துவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் !
உயிரிழந்த தென்காசி விவசாயி முத்துவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் !

By

Published : Jul 29, 2020, 1:04 AM IST

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து. விவசாயியான இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்திற்குள் காட்டுப் பன்றிகள் புகாமல் இருக்க சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு வந்த புகாரைத் தொடர்ந்து அணைக்கரை முத்துவை கடந்த 22ஆம் தேதி மாலை விசாரணைக்கு சிவசைலம் வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்களால் அவர் தாக்கப்பட்டதாகவும், தொடர்ந்து நள்ளிரவுக்குப் பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டு, கூடுதல் மருத்துவ உதவிக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

வனத்துறை தாக்குதலில்தான் அணைக்கரை முத்து உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள், அவரின் உடலை மீண்டும் உடற்கூறாய்வு சோதனைக்குட்படுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து 5ஆவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் .

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், அணைக்கரை முத்து குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதித்தன், "விசாரணைக்காக வனத்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில் அணைக்கரை முத்து உயிரிழந்துள்ளது, அப்பட்டமான படுகொலை என்பதைக் காட்டுகிறது. இதை அகில இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது. வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details