தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருக்கை விவகாரம்.. சபாநாயகர் அப்பாவு விளக்கம்..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சட்டபேரவை தலைவரின் முழு உரிமை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 25, 2023, 6:20 PM IST

சபாநாயகர் அப்பாவு விளக்கம்

தென்காசி இ.சி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (பிப். 25) நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். இதையடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் செய்தியாளர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து கேள்வி எழுப்ப்பபட்டது. இதற்கு பதிலளித்த அவர், சட்டப்பேரவை இருக்கையில் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சட்டப்பேரவை தலைவரின் முழு உரிமை. அது குறித்து அந்த நேரத்தில் சட்ட சபையில் அதை பார்த்துக் கொள்ளலாம்.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.1,000, 2023 ஆண்டுக்குள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:தென் மாவட்ட சிறப்பு ரயில்கள் மூலம் வசூலை அள்ளிய தெற்கு ரயில்வே!

ABOUT THE AUTHOR

...view details