தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், கடந்த சில நாள்களாகக் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை தினமும் சராசரியாக நான்கு பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த எட்டு நாள்களாக யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று மீண்டும் இரண்டு பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 25ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் 38 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், 11 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டணம் வசூல்! - ஏழை எளியோர் அதிர்ச்சி!