தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இந்து நாடார் உறவின் முறை மகமை சங்க நிலத்தை முறைகேடாக அபகரிப்பதாகவும், இந்து நாடார் உறவின் முறை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அவதூறாக நடந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து அதிமுக முன்னாள் சேர்மன் சங்கரபாண்டியன் மற்றும் அவருக்கு துணை போனதாக கூறி தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் ஆகியோரை கண்டித்து புளியங்குடி மாரியம்மன் கோவில் முன்பு உள்ள கலையரங்கில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பிரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
தென்காசி: புளியங்குடியில் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக முன்னாள் அதிமுக சேர்மன் மற்றும் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோரை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பிரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு பேரணியாக சென்று புளியங்குடி பள்ளிவாசல் , பேருந்து நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .