தென்காசி: வாசுதேவநல்லூர் அருகேவுள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (நவ.19) சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முனைவர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் 280 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன. இதில் கணிதத்துறையின் ராஜேஸ்வரி பொது தமிழில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக வந்து தங்கப் பதக்கம் பெற்றார்.