தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அருகன்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மகேஸ்வரன் (31). இவர் தற்போது மத்திய பின்னிருப்பு காவல் படையில் (CRPF) படை வீரராக சட்டீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தை அருகன்குளத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் மகேஸ்வரன் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தனது சொந்த ஊரான அருகன்குளத்திற்கு மருத்துவ விடுப்பில் வந்துள்ளார். இந்நிலையில் தென்மலையில் இருந்து எட்டிசேரி செல்லும் வழியில் உள்ள மரத்தில் மகேஸ்வரன் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.