தென்காசி:மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த அபூர்வ சர்க்கார் என்பவர் ஏழை எளியோருக்கு நீண்ட நாட்களாகக் குறைந்த கட்டணத்தில் பரம்பரை வைத்தியம் செய்து வருகிறார். இவர்களது குடும்பம் தமிழ்நாட்டின் தென்காசியில் புலம்பெயர்ந்துள்ளது. இவரது மகன் அன்சூசர்க்கார்(6) புளியங்குடியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுவன் கரோனா ஊரடங்கில் கிரிக்கெட் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துவந்துள்ளார். அப்படி ஒரு நாள் சிறுவனின் ஆட்டத்தை பார்த்த தந்தை வியந்துபோனார். இதனால், சிறுவனுக்கு தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்.
5 மணி நேரம் பயிற்சி: நாளுக்கு நாள் சிறுவன்கிரிக்கெட்டில் அசாதாரணமாக விளையாடவே. பயிற்சி கொடுக்கும் நேரத்தை அதிகரித்து தினமும் நான்கு முதல் 5மணி நேரம் பயிற்சி கொடுத்துவந்தார். இதனிடையே பள்ளிகள் திறக்கப்பட்டதால், தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை இரண்டு மணி நேரம் பயிற்சி கொடுத்து வருகிறார்.