தென்காசி மாவட்டம்: வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சார்லி அமல்சிங் (வயது 34) மத போதகரான இவர் மதுரையில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வரும் நிலையில், அவரது சொந்த ஊரான வல்லம் பகுதிக்கு வருகை தந்த சார்லி அமல்சிங் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், தான் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்த போது, 4 நபர்கள் லிப்ட் கேட்பது போல் என் காரை மறித்து தன்னுடைய செயின், பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்று விட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் வழிப்பறி கொள்ளையா? என பொதுமக்கள் அச்சமடையவே உடனே களத்தில் இறங்கிய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சார்லிஅமல்சிங்கிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜபுரம் பகுதியை சேர்ந்த வைரமுத்து, மதுரையைச் சேர்ந்த மகேஷ், தூத்துக்குடியைச் சேர்ந்த சண்முகம் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 3 வாலிபர்களையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் பாணியில் விசாரித்த போது, பல உண்மைகளை அவர்கள் கூறினர். அதன்படி, சார்லி அமல்சிங்கிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேரும் ஜெயில் நண்பர்கள் என்பதும், சார்லி அமல்சிங்கிற்கும் அவர்களுக்கும் முன்பே பழக்கம் இருந்ததும், குறிப்பாக கிண்டர் எனும் ஓரின சேர்க்கையாளர் ஆப் மூலமாக அவர்கள் பேசிக் கொண்டதும் தெரியவந்தது.
மேலும், சார்லி அமல்சிங்குடன் ஓரினசேர்க்கையில் ஈடுபடுவதற்காக இந்த நான்கு வாலிபர்களுக்கு ரூ. 25 ஆயிரம் பணம் பேரம் பேசியதாகவும், அதன்படி, சார்லிஅமல் சிங் காரில் ஏறிய அந்த வாலிபர்கள் வேலையை முடித்துவிட்டு அதற்கான கூலியையும் வங்கி கணக்கு மூலம் பெற்று உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, 'திருடன் கண்ணில் தங்க நகை பட்டால் விட்டு வைப்பானா என்ன, என்கின்ற பழமொழிக்கு ஏற்ப சார்லி அமல்சிங்கின் கழுத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த 18 கிராம் மதிப்பிலான தங்க சங்கிலியை பார்த்த அந்த வாலிபர்கள் அமல்சிங்கை அடித்து உதைத்து அவர் கழுத்தில் இருந்த செயின், கையில் இருந்த மோதிரம், பணம் உள்ளிட்டவைகளை பறித்து உள்ளனர்.அதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்த குற்றாலம் போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு குற்றவாளியை தற்போது தேடி வருகின்றனர்.
ஓரின சேர்க்கை தொடர்பால் விபரீதம் - மதபோதகரிடம் வழிப்பறி - போலீஸ்
நகை,செயினை மர்மநபர்கள் பறித்ததாக, மதபோதகர் அளித்த புகாரை விசாரித்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
கூடா நட்பின் பலன் - மதபோதகரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த வாலிபர்கள்
மேலும், கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப சமூக வலைதளம் மூலம் பழகிய வாலிபர்களை நம்பி தங்க நகையை இழந்த மதபோதகரே இந்த பழமொழிக்கு சாட்சி என கூறுகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி சிவா எம்.பி.யின் மருமகன் மீது வழக்கு.. எதுக்கு தெரியுமா?