தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டீ மாஸ்டர் வெட்டி படுகொலை.. ஒரே வாரத்தில் 5வது கொலை.. தென்காசியில் நடந்தது என்ன? - தென்காசி எஸ் பி

Tenkasi Murder: தென்காசியில் டீ மாஸ்டர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 கொலைகள் நடந்திருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

tea master hacked to death in Tenkasi the fifth murder in a week
டீ மாஸ்டர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 8:16 PM IST

தென்காசி:கடையநல்லூர் அருகே புளியங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நவாச்சாலை ஓடைப்பகுதியில் ஒருவர் வெட்டப்பட்டு, உயிரற்ற நிலையில் கிடந்ததை அந்த வழியாகச் சென்ற நபர்கள் நபரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து புளியங்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அசோக் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபொழுது சரமாரியாக வெட்டப்பட ஆண் உடல் இருந்ததை பார்த்தனர். மேலும் உடனடியாக காவல்துறையினர் இறந்த அந்த உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறையினர், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அவர் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பதும், அவர் டீ மாஸ்டர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலைக்கான காரணங்கள் என்ன? என்பது குறித்தும் கொலை செய்த மர்ம நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும், காவல்துறையின் முதற்கட்ட தகவலில், திருமணம் தாண்டிய உறவினால் இந்த கொலை அரங்கேறி உள்ளது எனத் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மேலும், தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே ஐந்து கொலைகள் அரங்கேறி உள்ளது.

இதனால் தென்காசி மாவட்டத்தில் தினசரி பரபரப்பான சூழ்நிலையை காணப்படுகிறது. அதேபோல சில தினங்களுக்கு முன்பாக பல பகுதிகளில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகன திருட்டு சம்பவமும், நகைகள் திருட்டு சம்பவம், வீடுகளில் கொள்ளை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனால் காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட வேண்டுமெனவும், இரும்புக்கரம் கொண்டு குற்றச்செயல்கள் நடைபெறாமல் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும், தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தொடர்ந்து புளியங்குடி பகுதியில் டீ மாஸ்டர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுரேஷ் பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வைகோவின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்.. நெல்லையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details