தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பைகளால் சுகாதாரக் கேடு - நகராட்சி அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தென்காசி நகராட்சி அலுவலகம்

தென்காசி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 18, 2020, 12:36 AM IST

தென்காசி மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட 19ஆவது வார்டு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் வீடுகளில் இருந்து வாங்கக்கூடிய குப்பை கழிவுகளை குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே கொட்டி சேகரிக்கின்றனர்.

அக்குப்பைகளினால் காற்றில் மூலமும், நாய்களாலும் சுகாதார சீர்கேடு விளைவிப்பதாகக் கூறி நகராட்சி நிர்வாக அலுவலகத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், நகர தலைவர் அபாபில் மைதீன் தலைமையில் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அப்பகுதியில் கொட்டக்கூடிய குப்பைகளை மாற்றியமைக்க வேண்டும் எனவும், தங்கள் பகுதிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீரை இரண்டு முறை என மாற்றியமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும், தங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கைகளை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையரிடம் இதுகுறித்து மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details