தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய உழவர் சந்தை அடிக்கல் நாட்டு விழா - அரசு அடிக்கல் நாட்டு விழா

தென்காசியில் புதிய உழவர் சந்தைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

புதிய உழவர் சந்தைக்கான அரசு அடிக்கல் நாட்டு விழா
புதிய உழவர் சந்தைக்கான அரசு அடிக்கல் நாட்டு விழா

By

Published : Sep 16, 2022, 11:46 AM IST

தென்காசியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்திருப்பதால் அதனை மாற்றி மக்கள் அதிகம் உள்ள பகுதியில் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று(செப்.15) வேளாண்மை துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.

வேளாண்மை விற்பனை குழு மற்றும் அரசு நிதியிலிருந்து சுமார் 38 லட்ச ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதனையடுத்து நேற்று புதிய உழவர் சந்தை அமைய உள்ள இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார்.

புதிய உழவர் சந்தைக்கான அரசு அடிக்கல் நாட்டு விழா

இந்த நிலையில் தென்காசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனி நாடார் மற்றும் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் ஆகியோர் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டினர். அதனைத் தொடர்ந்து தென்காசி நகரின் மையப் பகுதியில் உள்ள ஜெகவீரராமபேரி குளத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் திமுக ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, அழகு சுந்தரம், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை உறுப்பினர் ராமராஜா, தென்காசி காங்கிரஸ் நகரப் பொருளாளர் ஈஸ்வரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி ஜோதிடர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அடுத்தவர் சாதனைக்கு, ஸ்டிக்கர் ஒட்டும் திமுக - அண்ணாமலை ஓபன் அட்டாக்

ABOUT THE AUTHOR

...view details