தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள குறிஞ்சாங்குளம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜன.1ஆம் தேதி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டி நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டபோது, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிஞ்சாங்குளத்தில் காவல் துறையினர் பாதுகாப்பில் விளையாட்டுப் போட்டிகள் மேலும், திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் உள்ளிட்டவைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் அனுமதியை மீறி விளையாட்டு போட்டி நடத்த முயற்சித்தபோது கைது செய்யப்பட்டனர்.
காவல் துறையினரின் பாதுகாப்பு
அதனைத்தொடர்ந்து மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு விளையாட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்படும் எனக் கூறியதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், இன்று (ஜன.25) காலை 10 மணி அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் இருதரப்பினருக்கும் இடையே அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தென்காசி மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில், நெல்லை ஏடிஎஸ்பி, தென்காசி ஏடிஎஸ்பி மற்றும் 6 டிஎஸ்பிகள் உள்பட 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அப்பகுதியில் சிறுவர் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
இதையும் படிங்க:தரமற்ற உணவு வழங்கினால் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து - அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்