தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனிக்கும் இளமை டூ சபரிமலை குருசாமி வரை.. விஜயகாந்த் - தென்காசி இடையேயான பந்தம்.. சிறப்புத் தொகுப்பு! - விஜயகாந்த் மறைவு

Captian Vijayakanth memories: மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்திற்கும் தென்காசி மாவட்டத்திற்குமான பிணைப்பு குறித்து, கடையநல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காந்தி என்பவர் பகிர்ந்து கொண்ட சிறப்பு செய்தி தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 10:54 AM IST

சமூக ஆர்வலர் காந்தி

தென்காசி: தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் இழப்பு தேமுதிக தொண்டர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் என லட்சக்கணக்கான மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

கட்சி தொண்டர்களாலும், ரசிகர்களாலும் கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த்தின் மறைவிற்குப் பிறகு, அவருடனான நினைவுகள் மற்றும் அவரைக் குறித்த அறியப்படாத தகவல்கள் பலவற்றை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சார்ந்த சமூக ஆர்வலர் காந்தி என்பவர் விஜயகாந்திற்கும் தென்காசி மாவட்டத்திற்குமான தொடர்பு குறித்து பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய அவர், "விஜயகாந்திற்கும் தென்காசி (அப்போதைய திருநெல்வேலி மாவட்டம்) உள்ள நல்லுறவு என்பது பல உள்ளன.

விஜயகாந்தை, இனிக்கும் இளமை எனும் திரைப்படம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது, கடையநல்லூரைச் சார்ந்த இயக்குநர் எம்.ஏ.காஜா. மேலும், 1980களில் விஜயகாந்த் சபரிமலைக்கு செல்லும் போது, கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள திருநாவுக்கரசு பள்ளியின் தாளாளர் தம்புசாமி என்பவர் தான் அவருக்கு குருசாமியாக இருந்தார்.

மேலும், தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நிறுவிய அமர் சேவா சங்கத்திற்காக சுமார் 6 ஏக்கர் நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார். மேலும், பாபநாசம் அடுத்த விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள சென்ட் மேரிஸ் பள்ளி அவர் பள்ளிப்படிப்பை படித்தார்.

நடிகர் விஜயகாந்த்திற்கு மன்றம் துவக்கப்பட்ட காலகட்டத்தில், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் செயலாளராக, சொக்கம்பட்டியைச் சார்ந்த முத்தையா பாண்டியன் என்பவர் தான். அவர், விஜயகாந்திற்கும், அவரது குடும்பத்தின்றரோடு இன்று வரை நல்லுறவு மேற்கொண்டு வருகிறார்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜயகாந்த் மனதில் பட்டதை தைரியாமாகவும், வெளிப்படையாகவும் பேசக்கூடியவர். அவரைப் போன்று ஆயிரம் கலைஞர்கள் திரைத்துறைக்கு வரலாம். ஆனால் ஆயிரம் கலைஞர்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவரை போன்று மக்களுக்கு உதவும் குணம் படைத்த ஒரு நபரை இனி காணமுடியாது" என தனக்கு விஜயகாந்திடம் பிடித்த விஷயங்களைக் குறித்து பகிர்ந்து கொண்டார்.

மேலும், விஜயகாந்தின் மறைவு குறித்து பேசும் போது, "கேப்டன் விஜயகாந்தின் மரணம் தமிழர்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக அவரது ரசிகர்கள் அவர்களது வீட்டில் ஏற்பட்ட இழப்பை போல அவரது இறுதி ஊர்வலம் வரை இருந்து துக்கத்தை அனுசரித்தனர்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் கேப்டனுக்கு அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details