தென்காசி:2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறும். இதன் அடிப்படையில் ஜனவரி மாதம் வரைவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்நிலையில் இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தமிழ்நாட்டில் இன்று (அக்.27) முதல் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் முன்னதாக வரையறுக்கப்பட்ட வாக்களார் பட்டியலை வெளியிட்டு, அதில் மேலும் வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் என 18 வயது பூர்த்தி அடைந்தவர்களின் பட்டியலை வரையறுக்க சிறப்பு முகாம்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் தென்காசி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மேலும் 18வயது பூர்த்தியான மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் விதமாக அணைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டார். அதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
மாவட்டம் |