தென்காசி:தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர், முத்து இருளப்பன். இவரது மகன் உதயகுமார் (23). இவர், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கையில் அரிவாளை ஏந்தியபடி போட்டோ மட்டும் வீடியோக்களை எடிட் செய்து பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், அவரது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அதனைக் கண்ட செங்கோட்டை காவல்துறை அதிகாரிகள், நேற்று (நவ.28) அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். அப்போது, அவர் உபயோகித்த அரிவாள் மற்றும் தொலைபேசியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.