தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அச்சம்பட்டி சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெடிப் பொருள்கள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருள்கள் பறிமுதல்!
தென்காசி: சங்கரன்கோவில் அருகே அனுமதியின்றி வாகனத்தில் வெடிபொருள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களை கொண்டு சென்ற வாகனம், வெடி பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை நடத்தியதில், அதில் அனுமதியின்றி வெடிபொருள்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த கடையநல்லூர் அருகே குமந்தாபுரத்தைச் சேர்ந்த கோபால் (55) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் கிணறு வெட்ட வெடி பொருள்களுக்கு தேவையான மூலப்பொருள்கள் கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
வெடி தயாரிக்க தேவையான மூலப்பொருள்களை அதற்கான அனுமதிக்கப்பட்ட தனி வாகனத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். இவர் டிராக்டரில் எடுத்துச் சென்றதால் சட்டப்படி குற்றம் எனவே சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் கோபாலை கைது செய்தனர்.
கிணறு வெட்ட பயன்படுத்தும் 25க்கு மேற்பட்ட சிலரி என்ற வெடிபொருள், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.