தென்காசி: கடையநல்லூரில் மணிக்கூண்டு அருகே ராஜபாளையம் - புளியரை நான்கு வழி சாலையை மாற்று பாதையில் செயல்படுத்த கோரியும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விவசாய நிலங்களை பாதுகாத்திட கோரியும் SDPI கட்சி மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே நான்கு வழி சாலை நில அளவைக்கு வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.