தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதற்கட்டமாகத் தமிழ்நாட்டின் கடன் சுமையைக் குறைப்போம் - சரத்குமார் - தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி : முதற்கட்டமாகத் தமிழ்நாட்டின் கடன் சுமையைக் குறைப்போம் எனச் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பரப்புரையின்போது தெரிவித்தார்.

sarathkumar_campaign
sarathkumar_campaign

By

Published : Apr 4, 2021, 6:00 AM IST

Updated : Apr 4, 2021, 6:16 AM IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியின் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து ஆலங்குளத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் கடந்த 53 ஆண்டுகள் இரண்டு திராவிட இயக்கங்களும் ஆட்சிசெய்துள்ளன. அதற்கு ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் எங்களுடன் இருப்பவர்கள் அறிவாளிகள், எங்களைக் காட்டிலும் அறிவு அதிகம் உள்ளவர்கள். அவர்களைக்கொண்டு தேர்தல் அறிக்கைகள் தயார்செய்யப்பட்டுள்ளன. அதன்படி முதற்கட்டமாகத் தமிழ்நாட்டின் கடன்சுமையைக் குறைப்போம், தொழில்வளத்தைப் பெருக்கி வேலைவாய்ப்புகளை அதிகரிப்போம்" எனக் கூறினார்.

சரத்குமார் பரப்புரை
மேலும் பேசிய அவர், "திமுக தேர்தல் அறிக்கையில் காவலர்கள் பணியின்போது வீர மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி என அறிவித்துள்ளது. அதனை வரவேற்கிறேன்.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி அதே காவல் துறையினரை மிரட்டும் தொனியில் பேசுகிறார்.காவலர்களை மிரட்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களை விட்டுவைக்க மாட்டார்கள்” எனப் பேசினார்.

Last Updated : Apr 4, 2021, 6:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details