தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி தபசு விழா மிகவும் பிரசித்திப் பெற்றது. அரியும் சிவனும் ஒன்று என்பதை சிவபெருமான் உணர்த்தும் வகையில் காட்சி அளிக்க வேண்டும் என தவமிருந்த கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.
கரோனா ஊரடங்கு: சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் விழா ரத்து! - தென்காசி சங்கரன்கோவில் திருவிழா ரத்து
தென்காசி: கரோனா ஊரடங்கு காரணமாக பிரசித்திப் பெற்ற சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலின் ஆடி தபசு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆடி தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 11ஆம் நாள் ஆடி தபசும், 12ஆம் நாள் திருக்கல்யாணமும் நடைபெறும். இந்த நாட்களில் கோமதி அம்மாள் ஒவ்வொரு வாகனத்தில் அலங்காரத்துடன் வீதி உலா நடைபெறும்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாகவும், தொற்று பரவல் காரணமாகவும் அம்பாள் வீதியுலா புறப்பாடு செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், கோயில் உள்பிரகாரத்தில் போதிய இடவசதி இல்லாததால் ஆடி தபசு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தென்காசி நகர் பகுதியில் உள்ள கோமதி அம்பாள் கோயிலிலும் ஆடி தபசு நிகழ்ச்சியை ஆகம விதிப்படி நடத்த இயலாததால் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.