பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கக்கூடிய மருத்துவ குணமிக்க தவுன் விற்பனை தென் மாவட்டங்களில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. தமிழர்களின் வாழ்வியல் முக்கிய அங்கமாக பனை மரம் விளங்குகிறது.
பனை மரத்தின் வேர் முதல், உச்சி வரை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. அந்த வகையில் பனை மரத்திலிருந்து பனைஓலை விசிறிகள் செய்வதற்கும், கூரைகள் கட்டுவதற்கும், பதநீர், இயற்கை பானமான கள், பனங்கிழங்கு, போன்றவை கிடைத்து வருகிறது.
அந்த வகையில் பனம்பழத்தின் கொட்டையிலிருந்து உண்பதற்கு ஏற்ற வகையில் தவுண் கிடைக்கிறது. ஒரு சில மாதங்களில் கிடைக்கப்பெறும் இந்த தவுண் மருத்துவ குணமிக்கதாக கருதப்படுகிறது. தவுன் பருவம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நீடிக்கும், நுங்கு பனம்பழமாக மாற 40 நாள்கள் பிடிக்கும்.
அந்த வகையில், "பழங்களை புதைத்துவிட்டு, தரமான தவுன்களை எடுக்க 50 முதல் 70 நாள்கள் வரை காத்திருக்க வேண்டும்,"கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது தவன் குறித்து அறிந்தார்.