தென்காசி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தலைமையில் நடைபெற்றது. ஆட்சித்தலைவர் சமீரன் முன்னிலையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், தென்காசி மாவட்ட வருவாய் மற்றும் ஊடகத்துறையில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணும் பொருட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார், ”தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்குகளுக்கு பொது தகவல் அலுவலர்கள் மூலம் நேரடியாக தீர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.