கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாற்பது நாள்களுக்குப் பிறகு நேற்று மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
நோய்த்தொற்றை முழு அளவில் கட்டுக்குள் கொண்டு வராத நிலையில் மதுக்கடைகள் திறப்பதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கூட்டணி கட்சியினர் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து கருப்புச் சட்டை போராட்டத்தை நடத்தினர்.