தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன ஓட்டியிடம் கையூட்டுப் பெற்ற காணொலி வைரல்: காவலர் பணியிடை நீக்கம்! - ஆயுதப்படை காவலர்

நெல்லை: வாகன ஓட்டியிடம் காவலர் கையூட்டுப் பெற்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அவரைப் பணியிடை நீக்கம்செய்து நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் தீபக் தாமோர் உத்தரவிட்டுள்ளார்.

காவலர் பணிஇடைநீக்கம்!
காவலர் பணிஇடைநீக்கம்!

By

Published : Apr 29, 2020, 11:25 AM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களான பால், காய்கறி, மருந்து உள்ளிட்ட பொருள்களைக் கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்காணிக்கும் வகையில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலை, ராணி அண்ணா மகளிர் கல்லூரி முன்பு இரவு நேர ரோந்துப் பணியில் ஆயுதப்படை காவலர் செல்வகுமார் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக நெல் மூட்டை ஏற்றிவந்த லாரியை நிறுத்தி செல்வகுமார் ரூ.50 கையூட்டுப் பெற்றுள்ளார். அவர் கையூட்டுப் பெறும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகத் பரவத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் தீபக் தாமோர், காவலர் செல்வகுமாரை பணியிடை நீக்கம்செய்து உத்தரவிட்டுள்ளார்.

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் காவலர்

இதையும் பார்க்க: ஐஐடி கரக்பூர் ஆராய்ச்சி மாணவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details