தென்காசிமாவட்டம் கடையம் அருகே மடத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன்-செந்தாமரை தம்பதி. பாலமுருகன் அதே பகுதியில் எம்சான்ட் மணல் தயாரிக்கும் தொழில் செய்துவருகிறார். அவரிடம் போலீசார் லஞ்சம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செந்தாமரை மீது போலீசார் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால், செந்தாமரை திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லஞ்சம் கேட்டு போலீசார் வந்ததாகவும், கணவர் இல்லாததால் என்னை தாக்கியதாகவும் செந்தாமரை தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், "கடந்த சனிக்கிழமை (செப். 17) வீட்டில் இருந்த போது, இரண்டு காவலர்கள் வந்தனர். அதில் ஒருவர் நான் இருந்த அறையின் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார்.