தென்காசி:அச்சன்புதூர் அருகேவுள்ள மேக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல் கனி - ஜைத்தூன் பீவி தம்பதி. இவர்களது மூத்த மகன் காசிர் அலி (26) தனது மனைவி அசன் பீவி (19) என்பவருடன் மேக்கரை பகுதியில் அடவிநயினார் கோயில் அணைக்குச் செல்லும் வழியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகையன்று காசீர் அலிக்கும் அவரது மனைவி அசன் பீவி (19) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அசன் பீவி, தென்காசியிலுள்ள அவரது தந்தை வீட்டிற்குச் சென்றார்.
இதற்கிடையே வழக்கம்போல, நேற்று முன்தினம் (ஜூலை 12) இரவு வீட்டில் காசீர் அலியும், எதிர் வீட்டில் அவரது பாட்டி சைத்துன் பீவியும் தூங்கி கொண்டிருந்தனர். பின்னர், கணவருடன் கோபித்து கொண்டு தந்தையாரின் வீட்டிற்கு சென்ற அசன் பீவி, தனது தந்தையோடு மறுநாள் கணவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் காசீர் அலியையும், அவரது பாட்டி அசன் பீவியும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.