கேரளாவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசி பழத்தைத் தின்று கருவுற்ற யானை இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாநில வனப்பகுதிகளில் தீவிர சோதனை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம், தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியில் தென்மலை அருகே ராக் உட் என்ற எஸ்டேட் வனப்பகுதியில் அங்குள்ள எஸ்டேட்டைச் சேர்ந்த மேலாளர் உள்ளிட்ட சிலர் நேற்று (ஜூன் 8) சிறிய செட் ஒன்றில் மயில்களை வேட்டையாடி சமைக்க முயன்றனர்.
மயிலை வேட்டையாடிவர்கள் கைது இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனக்காவலர்கள் சேனா ஜேம்ஸ், சிஜோ ஜாய், ஷாஜி ஆகியோரைக் கைதுசெய்தனர். பிறகு செந்துருனி வனவிலங்கு வார்டன் பி. சஜீவ் குமார், ரேஞ்ச் அலுவலர் சஜூட்ஸ் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 3 மாடர்ன் துப்பாக்கிகள், உரிமம் உள்ள இரண்டு துப்பாக்கிகள், ஒரு ஏர் கன் உள்ளிட்ட ஆறு துப்பாக்கிகள் பறிமுதல்செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பரவும் புதிய வகை கரோனா வைரஸ்!