தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆமை வேகத்தில் நடக்கும் பாவூர்சத்திரம் மேம்பால பணிகள்.. அதிகாரிகள் ஒத்துழைப்பு இன்மையே காரணம் என புகார்! - south railway station

Pavoorchatram: ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒத்துழைப்பு இன்மையால் பாவூர்சத்திர மேம்பால பணிகள் தொய்வாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள்னர்.

பாவூர்சத்திர மேம்பால பணிகள் தொய்வு
பாவூர்சத்திர மேம்பால பணிகள் தொய்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 1:25 PM IST

அதிகாரிகள் ஒத்துழைப்பு இன்மையால் பாவூர்சத்திர மேம்பால பணிகள் தொய்வு!

தென்காசி:நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை திட்ட மானது 430 கோடிகள் மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப்படுகிறது.போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் மேம்பால பணிகள் தொடங்கிக் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது.

இந்த மேம்பாலம் 900 மீ நீளமும் 20 மீ அகலமும் கொண்டது.இடது புறம் 22 தூண்களும்,வலது புறம் 22 தூண்களும் சேர்த்து மொத்தம் 44 தூண்களுடன் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.தற்போது நெல்லையிலிருந்து தென்காசி செல்லும் இடதுபுற பகுதியில்,போக்குவரத்து தடைப்படாமல் மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது.

இதில் தண்டவாளத்திற்குக் கிழக்குப் பகுதியில் 13 தூண்களும், மேற்கு பகுதியில் 9 தூண்களும் அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.தென்காசி செல்லும் இடது பக்க பகுதியில் இரு வழிக்கான பாலம் முழுமையாகத் தொடங்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. தூண்களுக்கான அடித்தளம் அமைத்து,வட்டவடிவிலான பில்லர் கான்கிரீட் மீது பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடக்கின்றன.

பொதுவாகத் தண்டவாளத்திற்கு மேலே அமைய இருக்கும் பால பகுதிகளை ரயில்வே துறை செய்து வந்த நிலையில் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளைத் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையே மேற்கொண்டு வருகிறது. இதனிடையே குறும்பலா பேரியைச் சார்ந்த ராஜசேகர பாண்டியன் என்பவருக்கு நெடுஞ்சாலைத் துறை அளித்த பதிலில், "பாவூர்சத்திரத்தில் அமைக்கப்படும் ரயில்வே மேம்பாலத்தின் ரயில்வே பகுதிக்கான வரைபடம், மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் ரயில்வே பகுதியில் வேலை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது."

இது குறித்து ராஜசேகர பாண்டியன் கூறுகையில், ரயில்வே துறையின் அலட்சியம் காரணமாக பல்வேறு இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் தண்டவாளத்திற்கு மேற்பகுதியில் அந்தரத்தில் தொங்குகின்றன.பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலத்தைப் பொறுத்தவரை ரயில்வே துறைக்கும்,நெடுஞ்சாலைத் துறைக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. தற்போது ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ரயில்வே கேட் அதிக தடவை மூடப்படுவதோடு, வாகனங்கள் இருபுறமும் கிலோமீட்டர் கணக்கில் அணிவகுத்து நிற்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், சென்னையில் உள்ள ரயில்வே முதன்மை பால பொறியாளரிடம், மதுரை ரயில்வே கோட்ட பொறியாளரிடமும் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால வரைபட அனுமதியை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் வரைபடங்களை வழங்காமலும் போதிய கால அவகாசம் தராததாலும் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் நாங்கள் கேட்கும் கூடுதல் தகவல்களையும் உடனடியாக வழங்கினால் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்றனர். எனவே தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக ரயில்வே துறைக்கு பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால வரைபடம் சம்பந்தமான போதுமான தகவல்களையும் கொடுத்து குறித்த நேரத்தில் ஒருங்கிணைப்பு செய்து பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க முன்வர வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:Madurai Teacher Godwin: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு.. மதுரை ஆசிரியர் காட்வின் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details