தென்காசி பள்ளியில் ஓணம் கொண்டாட்டம் தென்காசி:உலகம் முழுவதும் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் திருவோணம் தினத்தில் தங்களைக் காண வரும் மகாபலி மன்னனை வரவேற்க வண்ண வண்ண பூக்கோலமிடுவது வழக்கம். ஊஞ்சல் ஆடியும், நடனமாடியும் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
திருவோண திருநாள்:பழம்பெரும் மன்னன் மகாபலியின் இல்லறத்தை நினைவுகூறும் வகையில் அறுவடைக் காலத்தைக் குறிக்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது. கேரள மக்களின் இதயங்களில் இது ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாபெரும் திருவிழா கலாச்சார பாரம்பரியங்கள், சமூகக் கூட்டங்கள் மற்றும் சமையல் மகிழ்ச்சிகளின் அழகான கலவையாகும்.
ஓணத்தின் தோற்றம் பண்டைய புராணங்களிலிருந்து அறியப்படுகிறது. புராணத்தின் படி, கருணை மற்றும் பெருந்தன்மைக்குப் பெயர் பெற்ற மகாபலி மன்னன் கேரளாவை ஆண்டான். அவரது ஆட்சி செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் குறிக்கப்பட்டது. இருப்பினும், அவரது சக்தி மற்றும் புகழ் கடவுள்களிடையே கவலையை ஏற்படுத்தியது. மகாவிஷ்ணு, வாமனராக உருவெடுத்து, மகாபலியின் பணிவையும் பக்தியையும் சோதிக்க முயன்றார்.
ஒரு அடையாளச் சைகையில், மகாபலியின் ஆட்சி பாதாள உலகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டது. மேலும் ஓணத்தின் போது ஆண்டுக்கு ஒருமுறை தனது மக்களைச் சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இதில் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் இன்று ஓணம் திருநாளை முன்னிட்டு கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தென்காசியில் ஓணம்:மேலும் ஓணம் பண்டிகை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் பல்வேறு விதமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் வித்தியாசமான முறைகளில் ஓணம் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் இதில் ஒரு பகுதியாக கடையநல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பள்ளி குழந்தைகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூக்கோலமிட்டனர். மேலும் பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்து 'HAPPY ONAM' என்ற மாதிரி வடிவில் நிறுத்தி ஓணம் வாழ்த்துக்களைக் கூறினர்.
மேலும் ஓணம் திருநாளை முன்னிட்டு பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ராஜா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றன.
இதையும் படிங்க:Onam Festival : மலையாளத்தில் ஓணம் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!